லாரி மோதி வியாபாரி சாவு

விக்கிரவாண்டி அருகே லாரி மோதிய விபத்தில் வியாபாரி பரிதாபமாக இறந்தார்.;

Update: 2023-05-25 18:45 GMT

விக்கிரவாண்டி 

விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாத்தனூர் கிராமத்தை சேர்ந்தவர் தர்மலிங்கம் (வயது 56). விக்கிரவாண்டி கடைவீதியில் காய்கறி கடை வைத்து நடத்தி வந்தார். சம்பவத்தன்று இவர் வியாபாரம் முடிந்ததும் கடையை பூட்டிவிட்டு தனது மொபட்டில் வி.சாத்தனூர் நோக்கி புறப்பட்டார். விக்கிரவாண்டி வடக்கு புறவழிச்சாலை அருகே சென்றபோது சென்னையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற ஒரு லாரி எதிர்பாராதவிதமாக மொபட் மீது மோதியது. இந்த விபத்தில் தலையில் பலத்த காயமடைந்த அவர் சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்