வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை
வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தொட்டியம் அருகே உள்ள அரசலூர் முல்லை நகரை சேர்ந்தவர் வனிதா (வயது32). இவர் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்த போது அங்கு தன்னுடன் பணிபுரிந்த ஜீவானந்தம் (53) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு அரசலூரில் வசித்து வந்தார். இவர்களுக்கு பிரகதீஸ்வரன் என்ற மகனும், வர்ஷா என்ற 2-மாத பெண் குழந்தையும் உள்ளனர். ஜீவானந்தம் மேல கார்த்திகைபட்டி பிரிவு ரோடு அருகே தள்ளு வண்டியில் கோழிக்கடை நடத்தி வந்தார். இந்நிலையில் ஜீவானந்தம் நேற்று தனது வீட்டின் திண்ணையில் குழந்தைகளுக்கு தொட்டில் கட்டும் கயிற்றில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இது குறித்து வனிதா கொடுத்த புகாரின் பேரில் தொட்டியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.