தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
விருதுநகரில் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;
விருதுநகர் பழைய பஸ் நிலையம் முன்பு போக்குவரத்து ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கத்தின் சார்பில் 8 மணி நேர வேலையை 12 மணி நேரமாக மாற்றும் சட்ட திருத்தத்தை சட்டமன்றத்தில் குரல் வாக்கெடுப்புமூலம் நிறைவேற்றியதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்க மாநில குழு உறுப்பினர் பாண்டியன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தினை இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில குழு உறுப்பினர் பாலமுருகன் தொடங்கி வைத்தார். இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் நிர்வாகிகள் மற்றும் ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்க நிர்வாகி முருகேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.