தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
மயிலாடுதுறையில் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்;
அரசு போக்குவரத்து கழகங்களில் போதுமான ஆட்களை பணிநியமனம் செய்ய வேண்டும். ஒப்பந்த முறையில் ஆட்களை நியமனம் செய்வதை கைவிட வேண்டும். 8 மணிநேரம் வேலை என்பதை 12 மணிநேரமாக மாற்றி சட்டசபையில் மசோதா தாக்கல் நிறைவேற்றம் செய்வதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மயிலாடுதுறை அரசு போக்குவரத்துக்கழக பணிமனை முன்பு சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மத்திய சங்க துணைத்தலைவர் பாரதிமுருகன் தலைமை தாங்கினார். இதில் துணை பொதுச்செயலாளர்கள் ராமகிருஷ்ணன், ரவீந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.