தொழிற்சங்க கூட்டம்

ஊட்டியில் தொழிற்சங்க கூட்டம் நடந்தது.

Update: 2023-05-01 18:45 GMT

ஊட்டி, 

மே தினத்தை முன்னிட்டு சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கங்கள் சார்பில், ஊட்டியில் மே தின பேரணி நடந்தது. பேரணியை போஜராஜ் (ஏ.ஐ.டி.யு.சி.), ராதிகா (சி.ஐ.டி.யு.) ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் வினோத், ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட செயலாளர் மூர்த்தி ஆகிேயார் முன்னிலை வகித்தனர். ஊட்டி காபிஹவுஸ் பகுதியில் தொடங்கிய பேரணி மணிக்கூண்டு, லோயர் பஜார் வழியாக மத்திய பஸ் நிலையத்தை அடைந்தது. தொடர்ந்து மத்திய பஸ் நிலையம் பகுதியில் பொதுக்கூட்டம் நடந்தது.

இதுகுறித்து நிர்வாகிகள் கூறுகையில், 1948-தொழிற்சாலை சட்டத்தை திரும்ப பெற வேண்டும். குறைந்தபட்ச ஊதியம் மாதத்திற்கு ரூ.26 ஆயிரம் வழங்க வேண்டும். மத்திய அரசின் தனியார் மய கொள்கையை கைவிட வேண்டும். ஒப்பந்த, தற்காலிக ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். 44 தொழிலாளர் நல சட்டங்களை 4 தொகுப்புகளாக மாற்றியதை திரும்ப பெற வேண்டும் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்