தொழிற்சங்க கூட்டம்

தொழிற்சங்க கூட்டம் நடந்தது.;

Update:2023-10-25 00:15 IST

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பு அமைப்பான சோசியல் டெமாகரடிக், டிரேடு யூனியன் தொழிற்சங்கம் சார்பில் ராமநாதபுரத்தில் மாவட்ட ஊரக பணியாளர் கலந்தாய்வு கூட்டம் மேற்கு மாவட்ட தலைவர் யூசுப் தலைமையில் நடைபெற்றது. தொழிற்சங்க மாநில தலைவர் முகமதுஆசாத், மாநில பொதுச்செயலாளர் ரவூப் நிஸ்தார், மாநில துணைத்தலைவர் அப்துல் சிக்கந்தர், மாவட்ட நிர்வாகிகள், மாவட்ட கமிட்டி உறுப்பினர் கார்த்திகை செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பல ஆண்டுகளாக பணி செய்து வரும் ஊரக சமூக பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். ஊரக சமூக களப் பயிற்றுனர்களுக்கு கொடுக்கப்படும் ஊக்கத்தொகையை உயர்த்தி தர வேண்டும் என அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கிழக்கு மாவட்ட தலைவர் காதர்கனி நன்றி கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்