டிராக்டர் திருடியவர் கைது

டிராக்டர் திருடியவர் கைது

Update: 2022-12-11 19:42 GMT

தஞ்சை அருளானந்தநகரை சேர்ந்தவர் பானுமதி (வயது 51). இவர் தஞ்சை அருகே உள்ள கொல்லாங்கரையில் உள்ள பண்ணையில் தனக்கு சொந்தமான டிராக்டரை நிறுத்தி வைத்து இருந்தார். அந்த டிராக்டரை மர்ம நபர் யாரோ திருடிச்சென்று விட்டார். இது குறித்து தஞ்சை தாலுகா போலீசில் பானுமதி புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் பார்த்திபன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து டிராக்டர் திருடியவரை வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் டிராக்டரை திருடியது கொல்லாங்கரையை சேர்ந்த இளையராஜா (41) என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், மறைத்து வைத்திருந்த டிராக்டரையும் மீட்டனர். பின்னர் கைது செய்யப்பட்ட இளையராஜாவை, போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்