விழுப்புரத்தில் டிராக்டர் பேரணி
பா.ஜ.க.சார்பில் விழுப்புரத்தில் டிராக்டர் பேரணி நடைபெற்றது.;
விழுப்புரம்,
நாட்டின் 75-வது சுதந்திர தின விழாவையொட்டி விழுப்புரத்தில் பா.ஐ.க. சார்பில் டிராக்டர் பேரணி நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட பார்வையாளர் மீனாட்சி நித்தியசுந்தர் முன்னிலை வகித்தார். மாநில துணை தலைவர் சம்பத் டிராக்டர் பேரணியை தொடங்கி வைத்தார். இந்த டிராக்டர் பேரணியில் சுதந்திர போரட்ட தியாகிகளின் படம் வைத்து பா.ஜ.க.வினர் பேரணியாக சென்றனர். இந்த பேரணி முக்கிய வீதிகள் வழியாக சென்று வந்தது. இதில் மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலிவரதன், சிவதியாகராஜன், மாவட்ட பொதுச்செயலாளர்கள் ராம ஜெயக்குமார், பாண்டியன், சத்தியநாராயணன், மாவட்ட பொருளாளர் சுகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.