கல்குவாரியில் 60 அடி பள்ளத்தில் டிராக்டர் கவிழ்ந்து வடமாநில தொழிலாளி பலி

தென்னிலை அருகே கல்குவாரியில் 60 அடி பள்ளத்தில் டிராக்டர் கவிழ்ந்து வடமாநில தொழிலாளி பலியானார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.

Update: 2022-08-12 19:06 GMT

டிராக்டர் பள்ளத்தில் கவிழ்ந்தது

கரூர் மாவட்டம், தென்னிலையை அடுத்த கோடந்தூர் அருகே தனியாருக்கு சொந்தமான கல்குவாரி உள்ளது. இதில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சுதிப்மினிஸ் (வயது 21), சலீம்பேக் (24) ஆகிய இருவரும் டிரைவராக வேலை பார்த்து வந்தனர்்.இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை கல்குவாரிக்குள் மேற்கண்ட இருவரும் டிராக்டரில் சென்றபோது நடு வழியில் எதிர்பாராதவிதமாக டிராக்டர் சுமார் 60 அடி பள்ளத்தில் இருந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் இருவருக்கும் படுகாயம் ஏற்பட்டது.

ஒருவர் பலி

இதனை அறிந்த அருகில் இருந்தவர்கள் படுகாயமடைந்த இருவரையும் மீட்டுதனியார் ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சுதிப்மினிசை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.சலீம்பேக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து தென்னிலை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்