மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல்

மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது.;

Update: 2023-06-19 18:40 GMT

இலுப்பூர் அருகே உள்ள பாக்குடி பகுதியில் மணல் கடத்துவதாக போலீசாருக்கு பல்வேறு புகார் வந்தது. இதன்பேரில் இலுப்பூர் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவன் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பாக்குடி குளம் பகுதியில் வந்த ஒரு டிராக்டரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் அனுமதியின்றி மணல் கடத்தி சென்றது தெரியவந்தது. இதையடுத்து டிராக்டரை பறிமுதல் செய்த போலீசார் அதன் உரிமையாளர் பாக்குடியை சேர்ந்த சந்திரமூர்த்தி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்