டிராக்டர் சிறைபிடிப்பு
கழிவு பொருட்கள் கொட்டவந்த டிராக்டர் சிறைபிடிக்கப்பட்டது.;
பாளையங்கோட்டை சாந்திநகர் பகுதியில் உள்ள காலியிடத்தில் நேற்று காலையில் கழிவு பொருட்களை கொட்ட வந்த டிராக்டரை அப்பகுதி மக்கள் சிறைபிடித்தனர். பின்னர் அந்த டிராக்டரை மாநகராட்சி அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக அதிகாரிகள் மேற்கொண்ட முதல்கட்ட விசாரணையில், அந்த டிராக்டரில் பழைய பிளாஸ்டிக் பொருட்கள், பிளாஸ்டிக் கழிவு பாட்டில்கள் போன்றவை இருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.