அகஸ்தியர் அருவியில் குடும்பத்துடன் குவிந்த சுற்றுலா பயணிகள்

பாபநாசம் அகஸ்தியர் அருவியில் சுற்றுலா பயணிகள் நேற்று குடும்பத்துடன் குவிந்தனர். அவர்கள் ஆர்ப்பரிக்கும் தண்ணீரில் ஆனந்தமாக குளித்தனர்.

Update: 2023-05-20 18:58 GMT

விக்கிரமசிங்கபுரம்:

பாபநாசம் அகஸ்தியர் அருவியில் சுற்றுலா பயணிகள் நேற்று குடும்பத்துடன் குவிந்தனர். அவர்கள் ஆர்ப்பரிக்கும் தண்ணீரில் ஆனந்தமாக குளித்தனர்.

அகஸ்தியர் அருவி

பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள அகஸ்தியர் அருவியில் ஆண்டு முழுவதும் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுவதாலும், ஆன்மிக அருவியாக இருப்பதாலும் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வந்து குளித்து மகிழ்ந்து செல்கின்றனர்.

தற்போது கோடை வெயில் வெளுத்து வாங்குவதாலும், பள்ளி கோடை விடுமுறையை முன்னிட்டும் அகஸ்தியர் அருவிக்கு வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் தங்களது குடும்பத்துடன் கார் மற்றும் வேன்களில் அகஸ்தியர் அருவிக்கு வந்து செல்கின்றனர்.

ஆனந்த குளியல்

நேற்றும் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் அகஸ்தியர் அருவிக்கு வந்து குவிந்தனர். அவர்கள் ஆர்ப்பரிக்கும் தண்ணீரில் ஆனந்தமாக குளித்தனர். குறிப்பாக, சிறுவர்-சிறுமிகள் அருவியில் குளித்தபடி விளையாடி மகிழ்ந்தனர்.

மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வாகனங்களில் சுற்றுலா பயணிகள் படையெடுத்து வந்ததால், பாபநாசம் வனத்துறை சோதனை சாவடி மற்றும் அருவிக்கு செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இருப்பினும் சுற்றுலா பயணிகள் தங்கள் வாகனங்களுடன் அணிவகுத்து காத்து நின்று அருவிக்கு சென்று குளித்து மகிழ்ந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்