தொடர் விடுமுறையால் பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் குவிந்த பயணிகள்

தொடர் விடுமுறயைால் பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து மாங்குரோவ் காடுகளை கண்டு ரசித்தனர்.

Update: 2023-10-02 19:05 GMT

பரங்கிப்பேட்டை

மாங்குரோவ் காடுகள்

சிதம்பரம் அருகே உள்ள பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் இயற்கை கொடையாக அளித்த மாங்குரோவ் காடுகளை காண தினமும் உள்ளூர் மற்றும் வெளியூர், வெளிநாடுகளை சோ்ந்த சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். நாளுக்கு நாள் சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகரித்து வருவதால் தற்போது இந்த சுற்றுலா மையம் பல கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் காலாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்டதை அடுத்து கடந்த சில நாட்களாக இங்கு சுற்றுலா பயணிகளின் அதிகரித்துள்ளது. நேற்று விடுமுறை கடைசி நாள் என்பதால் பிச்சாவரம் சுற்றலா மையத்தில் வழக்கத்தை விட சுற்றலா பணிகள் பஸ், கார் மற்றும் இருக்கர வாகனங்களில் வந்தனர்.

படகு சவாரி

பின்னர் இவர்கள் படகுகளில் சென்று மாங்குரோவ் காடுகளின் இயற்கை அழகை கண்டு ரசித்தனர். அப்போது சிலர் சுரப்புன்னை மரங்களின் அடிப்பகுதியில் அதன் வேர்கள் கொத்தாக தண்ணீரை நோக்கி நீண்டு கொண்டிருந்ததை வியப்புடன் பார்த்ததோடு வேர் மற்றும் இலைகளை தொட்டு பார்த்து மகிழ்ந்தனர்.

மேலும் படகில் இருந்தவாறே தங்கள் செல்போனில் செல்பி எடுத்துக்கொண்டதோடு, மாங்குரோவ் காடுகளின் இயற்கை அழகை புகைப்படம் எடுத்துக்கொண்டனர். பின்னர் கரைக்கு வந்த அவர்கள் சுற்றுலா மையத்தில் உள்ள பூங்காக்களில் அமா்ந்து உணவு மற்றும் தின்பண்டங்களை தின்றனர். சுற்றுலா மையத்தின் பல்வேறு பகுதிகளை சுற்றி பார்த்த சுற்றுலா பயணிகள் மாலையில் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்