வடநெம்மேலி பாம்பு பண்ணையில் குவியும் சுற்றுலா பயணிகள்; 2 ஆயிரம் பாம்புகளை பிடிக்க இலக்கு

வடநெம்மேலி பாம்பு பண்ணையில் சுற்றுலா பயணிகள் குவிகின்றனர்.;

Update: 2022-10-09 09:20 GMT

பாம்பு பண்ணை

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அடுத்த கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள வடநெம்மேலி பகுதியில் தமிழக அரசின் தொழில் வணிகத்துறை சார்பில் இருளர் பாம்பு பிடிப்போர் தொழில் கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வருகிறது. அங்கு பார்வையாளர்கள் முன்பு கொடிய விஷமுள்ள பாம்புகளிடம் இருந்து விஷம் எடுத்து பார்வையாளர்களை திகைப்பூட்டுவர்.

மருந்து தயாரிக்க...

இந்த கூட்டுறவு சங்கத்தில் 350 இருளர் இனத்தவர்கள் அனுமதி சான்று பெற்று பாம்பு பிடித்து கூட்டுறவு சங்கத்திற்கு வழங்கி வருகின்றனர். இங்கு கொண்டு வரப்படும் பாம்புகள் பராமரிக்கப்பட்டு அதிலிருந்து எடுக்கப்படும் விஷத்தை மராட்டிய மாநிலம், புனேயில் உள்ள ஆராய்ச்சி மையத்திற்கு கேன்சர், பாம்பு விஷ முறிவு மருந்து தயாரிக்க வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் பாம்பு இனப்பெருக்க காலத்தை முன்னிட்டு கடந்த மே, ஜூன், ஜூலை ஆகிய 3 மாதங்கள் பாம்பு பண்ணை மூடப்பட்டது. பிறகு தடைக்காலம் முடிந்து கடந்த ஆகஸ்டு மாதம் 15-ந்தேதி பாம்பு பண்ணை திறக்கப்பட்டது.

குவியும் சுற்றுலா பயணிகள்

இதையடுத்து கடந்த 54 நாட்களாக சுற்றுலா பயணிகள் அங்கு கூட்டம், கூட்டமாக வந்த வண்ணம் உள்ளனர். பாம்பு பண்ணை திறக்கப்பட்ட 54 நாட்களில் 720 விஷ பாம்புகளை இருளர் இனத்தவர்கள் பிடித்துள்ளனர். மேலும் வருகிற 2022-23-ம் ஆண்டில் 2 ஆயிரம் விஷ பாம்புகள் பிடிக்க இலக்கு நிர்ணயித்துள்ளதாக பாம்பு பண்ணை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்