குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல்

குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர்.

Update: 2022-08-23 13:29 GMT

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் நேற்று காலையில் இருந்து சாரல் மழை விட்டு விட்டு தூறியது. இடையிடையே வெயிலும் அடித்தது. மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, புலியருவி, சிற்றருவி ஆகிய அனைத்து அருவிகளிலும் தண்ணீர் மிதமாக விழுந்தது. சுற்றுலா பயணிகள் கூட்டம் குறைவாக இருந்ததால் அவர்கள் அருவிகளில் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர்.

நேற்று முன்தினம் மாலையில் மெயின் அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்ததால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்