கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்..!
நட்சத்திர ஏரியில் சுற்றுலா பயணிகள் குடும்பத்தோடு படகு சவாரி செய்து மகிழ்ச்சி அடைந்தனர்.;
திண்டுக்கல்,
'மலைகளின் இளவரசியான' கொடைக்கானலில் குளு, குளு சீசன் கடந்த வாரம் தொடங்கியது. இதையொட்டி தினமும் பல்வேறு ஊர்களில் இருந்து சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர்.
இந்த நிலையில், தொடர் விடுமுறை விடப்பட்டதையொட்டி கொடைக்கானலில் இன்று ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர்.
பில்லர் ராக், பைன்மரக்காடு, மோயர் பாயிண்ட், பிரையண்ட் பூங்கா உள்ளிட்ட இடங்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். மேலும் நட்சத்திர ஏரியில் சுற்றுலா பயணிகள் குடும்பத்தோடு படகு சவாரி செய்து மகிழ்ச்சி அடைந்தனர். ஏரியை சுற்றி சைக்கிள் சவாரி செய்து மகிழ்ந்தனர்.