குரங்கு நீர்வீழ்ச்சியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

பொள்ளாச்சி அருகே குரங்கு நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

Update: 2023-09-25 00:15 GMT


பொள்ளாச்சி


பொள்ளாச்சி அருகே குரங்கு நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.


சுற்றுலா பயணிகள்


பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை புலிகள் காப்பகம் இயற்கை எழில் நிறைந்த மனதை கொள்ளை கொள்ளும் வகையில் ரம்யமாக காட்சியளிக்கும் பகுதி ஆகும். இங்கு கோவை மட்டுமின்றி திருப்பூர், ஈரோடு போன்ற பிற மாவட்டங்களில் இருந்தும், கேரளா போன்ற பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் தங்கள் விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் வருவது வழக்கம். கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.


இதனால் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் ஆழியார், ஆழியார் அணை பூங்கா, கவியருவி உள்ளிட்ட குளுமையான இடங்களுக்கு படையெடுத்துள்ளனர். இந்த நிலையில் நேற்று ஞாயிறு பொதுவிடுமுறை தினம் என்பதால், ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள ஆழியாறு கவியருவியில் (குரங்கு நீர்வீழ்ச்சி) குளிக்க சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகமாக காணப்பட்டது.


ஆனந்த குளியல்


மேலும் நேற்று முன்தினம் இரவு ஆழியாறு மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதியில் நல்ல மழை பெய்தது. இதன் காரணமாக நேற்று கவியருவியில் சற்று கூடுதலாகவே தண்ணீர் வரத்து காணப்பட்டது. இதனால் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குடும்பத்துடன் குளித்து மகிழ்ந்தனர். கூட்ட நெரிசல் அதிகமாக காணப்பட்டதால் ஆழியாறு போலீசார் மற்றும் வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Tags:    

மேலும் செய்திகள்