குற்றாலம் அருவியில் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்

குற்றாலம் அருவியில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.;

Update:2023-07-22 00:15 IST

குற்றாலத்தில் தற்போது சீசன் களை கட்டி வருகிறது. இங்குள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, புலி அருவி ஆகிய அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது. மெயின் அருவியில் நேற்று காலையில் பெண்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இதன் காரணமாக அவர்களை வரிசையில் நின்று குளிக்க போலீசார் அனுமதித்தனர். நேற்று சாரல் மழை மிதமான வெயில் அடித்தது. குளிர்ந்த காற்று வேகமாக வீசியது. அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் குளித்து வருகிறார்கள். இன்றும் நாளையும் விடுமுறை நாட்கள் என்பதால் அதிகமான சுற்றுலா பயணிகள் குற்றாலத்தில் குவிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்