பாபநாசம் அகஸ்தியர் அருவியில் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்
பாபநாசம் அகஸ்தியர் அருவியில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். மணிமுத்தாறு அருவியிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது.
விக்கிரமசிங்கபுரம்:
பாபநாசம் அகஸ்தியர் அருவியில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். மணிமுத்தாறு அருவியிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது.
அகஸ்தியர் அருவி
நெல்லை மாவட்டம் பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற அகஸ்தியர் அருவியில் ஆண்டு முழுவதும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும். இதனால் உள்ளூர் மட்டுமின்றி வெளிமாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வந்து குளித்து மகிழ்வார்கள்.
சுற்றுலா பயணிகள்
இந்த நிலையில் நேற்று புத்தாண்டு விடுமுறை தினம் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் அகஸ்தியர் அருவியில் குவிந்தனர். தொடர்ந்து அருவியில் சுற்றுலா பயணிகள் தங்களது குழந்தைகளுடன் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.
மணிமுத்தாறு அருவி
இதேபோல் நெல்லை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மழை பெய்தது.மாஞ்சோலை தேயிலை தோட்ட பகுதியிலும் பலத்த மழை பெய்தது. இதனால் மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கடந்த 25-ந் தேதி முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்தனர்.
இந்த நிலையில் தற்போது அருவிக்கு வரும் தண்ணீரின் வரத்து குறைந்தது. இதனால் நேற்று முதல் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் மணிமுத்தாறு அருவியில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது.