சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

யானைகள் நடமாட்டத்தால் சுருளி அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.;

Update:2023-10-05 05:45 IST
சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் கடந்த 6 நாட்களாக சாரல் திருவிழா நடைபெற்றது. திருவிழாவையொட்டி சுற்றுலா பயணிகள், பொதுமக்களுக்கு அருவியில் குளித்து செல்ல எவ்வித கட்டணம் இன்றி இலவசமாக வனத்துறையினர் அனுமதி அளித்தனர். இந்த நிலையில் நேற்று சுருளி அருவிப்பகுதியில் 5-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் திடீரென்று முகாமிட்டு இருப்பதை வனத்துறையினர் பார்த்தனர். உடனே சுருளி அருவிக்கு செல்லும் பாதையை தடுப்புகள் வைத்து வனத்துறையினர் மூடினர். யானைகள் அடர்ந்த வனப்பகுதிக்குள் செல்லும் வரை சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்