பவானிசாகர் அணையின் மேல்பகுதிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை; பொதுப்பணித்துறை அறிவிப்பு

ஆடிப்பெருக்ைகயொட்டி பவானிசாகர் அணையின் மேல்பகுதிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை என்று பொதுப்பணித்துறை அறிவித்துள்ளது.;

Update: 2023-08-02 22:16 GMT

பவானிசாகர்

ஆடிப்பெருக்ைகயொட்டி பவானிசாகர் அணையின் மேல்பகுதிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை என்று பொதுப்பணித்துறை அறிவித்துள்ளது.

பவானிசாகர் அணை

பவானிசாகர் அணைக்கு முன்பு 15 ஏக்கர் பரப்பளவில் பொழுதுபோக்கு பூங்கா உள்ளது. இந்த பூங்காவுக்கு ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி கோவை, திருப்பூர் மற்றும் கர்நாடக மாநிலத்தில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் அதிகமாக வந்து செல்வது வழக்கம். சுற்றுலா பகுதிகளுக்கு அணையின் மேல் பகுதியில் சென்று நீர்த்தேக்க பகுதியை பார்வையிட அனுமதி இல்லை. ஆனால் ஆண்டு தோறும் ஆடிப்பெருக்கன்று ஒரு நாள் மட்டும் அணையின் மேல் பகுதிக்கு செல்ல சிறப்பு அனுமதி வழங்கப்படும். அதனால் பவானிசாகர் அணைக்கு ஆண்டுதோறும் ஆடிப்பெருக்கன்று ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள்.

அனுமதி இல்லை

இந்தநிலையில் இந்த ஆண்டு அணையின் பாதுகாப்பு கருதி ஆடிப்பெருக்கான இன்று பவானிசாகர் அணை மேற்பகுதியை பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேசமயம் பவானிசாகர் அணை பூங்கா வழக்கம் போல் திறந்து இருக்கும். சுற்றுலா பயணிகள் பூங்காவுக்கு வந்து பொழுது போக்கி மகிழலாம்.

கடந்த 3 ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவல் காரணமாக பவானிசாகர் அணை பூங்காவுக்கு ஆடிப்பெருக்கன்று செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்