குற்றாலம் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
நீர்வரத்து குறைந்ததால் குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது.
குற்றாலத்தில் கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. நேற்று முன்தினம் மாலையில் மெயின் அருவியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று காலையில் அருவியில் நீர்வரத்து குறைந்ததால் சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் அனுமதி அளித்தனர். தற்போது, சபரிமலை சீசன் என்பதால் ஏராளமான அய்யப்ப பக்தர்கள் மெயின் அருவியில் குளித்து மகிழ்ந்தனர். அதுபோல் சுற்றுலா பயணிகளும் உற்சாகத்துடன் குளித்து சென்றனர்.