சுருளி அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி...!

ஒரு வாரத்திற்கு பிறகு சுருளி அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-07-16 06:45 GMT

தேனி,

தேனி மாவட்டம் கம்பம் அருகே மேற்குதொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள சுருளி அருவியில் வருடம் முழு வதும் நீர்வரத்து இருக்கும். இதனால் தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க வருகின்றனர்.

மேலும் அமாவாசை உள்ளிட்ட புனித நாட்களில் முன்னோர்களுக்கு அருவி கரையோரம் தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் மேகமலை, ஈத்தக்காடு வனப்பகுதியில் பெய்த தொடர் மழை காரணமாக சுருளிஅருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

மேலும் அப்பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிகமாக இருந்ததால் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி குளிப்பதற்கு வனத்து றையினர் தடைவிதித்தனர்.

இந்நிலையில் தற்போது தண்ணீர் வரத்து சீரடைந்துள்ளாதால் ஒரு வாரத்திற்கு பிறகு அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக நீராடி மகிழ்ந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்