சுற்றுலா அலுவலர் பொறுப்பேற்பு

நாகை, மயிலாடுதுறை மாவட்ட சுற்றுலா அலுவலர் பொறுப்பேற்றார்

Update: 2022-09-28 18:45 GMT

திருவெண்காடு:

பூம்புகாரை தலைமை இடமாகக் கொண்டு நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்ட சுற்றுலா அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதன் அலுவலராக இருந்த மாதவன் பணி மாறுதல் செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து மாவட்ட சுற்றுலா அலுவலராக அரவிந்தகுமார் பதவியேற்றார். இவருக்கு அலுவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர். இவர் ஏற்கனவே கோவை, திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்ட சுற்றுலா அலுவலராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்