சூறைக்காற்று.. மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை

கடலுக்கு செல்ல தடை விதித்து மீன்வளத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.;

Update: 2024-05-04 17:13 GMT

கடலூர்,

காற்றின்போக்கு காரணமாக தென் தமிழக கடற்கரை, கேரளா, கர்நாடகா, மும்பை கடலோரங்களில் அதீத அலைக்கான எச்சரிக்கை விடுக்கப்படுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை, கடலோர மாவட்டங்களில் கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்றும், இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த கவனமுடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கடலூர் மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லவும், பொதுமக்கள் கடலில் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. கடலில் 45 முதல் 65 கிலோமீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் என்பதால் கடலுக்கு செல்ல தடை விதித்து மீன்வளத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்