வேலாயுதம்பாளையம், மண்மங்கலம் பகுதிகளில் நாளைமறுநாள் மின்நிறுத்தம்

வேலாயுதம்பாளையம், மண்மங்கலம் பகுதிகளில் நாளைமறுநாள் மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.

Update: 2022-06-06 18:20 GMT

கரூர்,

புகழூர் துணைமின் நிலையத்தில் நாளைமறுநாள் (புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும் புன்செய் புகழூர், வேலாயுதம்பாளையம், தோட்டக்குறிச்சி, தளவாபாளையம், தவிட்டுப்பாளையம், நடையனூர், சேமங்கி, நொய்யல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது என கரூர் கிராமிய மின்வாரிய செயற்பொறியாளர் மாலதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

இதேபோல் வேப்பம்பாளையம் துணைமின் நிலையத்திற்குட்பட்ட வடிவேல்நகர் பீடர், மண்மங்கலம் துணைமின்நிலையத்திற்குட்பட்ட பண்டுதகாரன்புதூர் பீடர், புலியூர் துணைமின் நிலையத்திற்குட்பட்ட ரெங்கநாதபுரம் பீடர், வெள்ளியணை துணைமின் நிலையத்திற்குட்பட்ட பாளையம் பீடர் ஆகிய பீடர்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும் மில்கேட், எல்.ஆர்.ஜி.நகர், ஆண்டாங்கோவில் புதூர், சரஸ்வதி நகர், கோவை ரோடு, மண்மங்கலம், மேற்கூர், பண்டுதன்காரன்புதூர், காளிபாளையம், தூளிப்பட்டி, சீவியாம்பாளையம், கடம்பங்குறிச்சி, வரபாளையம், சின்னவள்ளிபாளையம், பூலாம்பாளையம், குளத்துப்பாளையம், வீரராக்கியம், பாலராஜபுரம், ரெங்கநாதபுரம், மேலமாயனூர், மேலகட்டளை, ஏ.பி.நகர், நத்தமேடு, ஆலமரத்துப்பட்டி, எலிகளியூர், விஜயநகரம், பிச்சம்பட்டி, துறையூர், சாலப்பட்டி, குளத்தூர், ஜல்லிப்பட்டி, பச்சம்பட்டி, வெங்கடாபுரம் மற்றும் குள்ளம்பட்டி ஆகிய பகுதிகளில் நாளைமறுநாள் (புதன்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது என கரூர் மின்வாரிய செயற்பொறியாளர் கணிகைமார்த்தாள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்