ஆலத்தூர், எடுத்தவாய்நத்தம், பகண்டை கூட்டுரோடு பகுதியில் நாளை மின் நிறுத்தம்

மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் ஆலத்தூர், எடுத்தவாய்நத்தம் மற்றும் பகண்டை கூட்டுரோடு பகுதிகளில் நாளை மின்சார வினியோகம் இருக்காது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

Update: 2023-02-20 18:45 GMT

சங்கராபுரம்

ஆலத்தூர் துணை மின் நிலையம்

ஆலத்தூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை(புதன்கிழமை) நடைபெற உள்ளது. இதன் காரணமாக ஆலத்தூர், அழகாபுரம், திருக்கனங்கூர், பிச்சநத்தம், மாதவச்சேரி, பால்ராம்பட்டு, அரியபெருமானூர், ரங்கநாதபுரம், வாணியந்தல், காந்திநகர், அகரகோட்டாலம், மூரார்பாளையம், பரமநத்தம், கல்லேரிகுப்பம், பழையசிறுவங்கூர், சித்தேரிப்பட்டு, சோழம்பட்டு, நெடுமானூர், சேஷசமுத்திரம், சூ.பாலப்பட்டு, தண்டலை, பெருவங்கூர், ரோடுமாமந்தூர், சிறுவங்கூர், மேலப்பட்டு, கீழப்பட்டு, தொன்னந்தூர், எம்.ஜி.ஆர் நகர், சிங்காரப்பேட்டை, ராயபுரம் ஆகிய பகுதிகளில் நாளை காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சங்கராபுரம் செயற்பொறியாளர் ரகுராமன் தெரிவித்துள்ளார்.

எடுத்தவாய் நத்தம்

அதேபோல் எடுத்தவாய்நத்தம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை நடைபெற உள்ளதால் எடுத்தவாய்நத்தம், துரூர், மட்டப்பாறை, பரிகம், கல்படை, பொட்டியம், மாயம்பாடி, மல்லியம்பாடி, பரங்கிநத்தம், கோட்டக்கரை, டேம் கோட்டர்ஸ், மாத்தூர், கரடிசித்தூர், தாவடிபட்டு, மண்மலை, செல்லம்பட்டு, கரியாலூர், வெள்ளிமலை ஆகிய பகுதிகளில் நாளை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது என கள்ளக்குறிச்சி பகுதி மின்வாரிய செயற்பொறியாளர் கணேசன் தெரிவித்துள்ளார்.

பகண்டை கூட்டுரோடு

அரியலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை(புதன்கிழமை) நடைபெற உள்ளது. இதனால் அரியலூர், அத்தியூர், தொழுவந்தாங்கல், கடுவனூர், பெரிய கொள்ளியூர், சின்ன கொள்ளியூர், வடமாமந்தூர், ஈருடையாம்பட்டு, சுத்தமலை, அத்தியந்தல், வடபொன்பரப்பி, சவுரியார்பாளையம், அரும்பராம்பட்டு, இளையனார்குப்பம், ஓடியந்தல், வானாபுரம், சீர்பனந்தல், ஜம்படை, திருவரங்கம், கள்ளிப்பாடி, பகண்டை கூட்டு ரோடு, மரூர், கடம்பூர், மையனூர், ஏந்தல், பெரிய பகண்டை, எகால் ஆகிய கிராமங்களில் நாளை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது என சங்கராபுரம் பகுதி மின்வாரிய செயற்பொறியாளர் ரகுராமன் வௌியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்