நாளை ஆடி மாதம் பிறப்பு: தேங்காய் சுடும் குச்சிகள் விற்பனை
நாளை ஆடி மாதம் பிறப்பு: தேங்காய் சுடும் குச்சிகள் விற்பனை
ஈரோட்டில் ஆண்டுதோறும் ஆடி மாதம் பிறப்பை வெகுசிறப்பாக கொண்டாடி வரவேற்பது வழக்கம். அன்றையதினம் வீட்டு வாசலில் பெண்கள் தேங்காய்களை சுட்டு விநாயகருக்கு படைத்து வழிபாடு நடத்துவார்கள். இதற்காக தேங்காயின் கண் பகுதியை உடைத்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு, பச்சரிசி, நிலக்கடலை, எள், நாட்டு சர்க்கரை, பச்சை பயறு ஆகியன தேங்காயின் உள்ளே வைக்கப்படும். பின்னர் நீளமான குச்சியில் தேங்காயை சொருகி நெருப்பில் சுட வைக்கப்படும்.
நாளை (திங்கட்கிழமை) ஆடி மாதம் பிறக்க உள்ளதால், ஈரோட்டில் தேங்காய் சுடும் குச்சிகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டு உள்ளன. ஈரோடு ஆர்.கே.வி.ரோடு, காய்கறி மார்க்கெட் உள்ளிட்ட இடங்களில் குச்சிகள் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு குச்சி ரூ.15-க்கு விற்கப்படுவதாக வியாபாரி ஒருவர் தெரிவித்தார்.