நாளை ஜெயலலிதா நினைவுதினம்: இன்று திதி கொடுத்த முன்னாள் அமைச்சர்...!

ஜெயலலிதாவின் 6 ஆம் ஆண்டு நினைவு தினம் (நாளை) திங்கள்கிழமை அனுசரிக்கப்படுகிறது.

Update: 2022-12-04 08:58 GMT

நாகை,

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் 2016 ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி காலமானார். ஜெயலலிதாவின் 6 ஆம் ஆண்டு நினைவு தினம் (நாளை) திங்கள்கிழமை அனுசரிக்கப்படுகிறது.

இந்த நிலையில், முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா நினைவு தினத்தையொட்டி முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் திதி கொடுத்தார். முன்னதாக கடற்கரையில் உள்ள தியான மண்டபத்தில் ஜெயலலிதா உருவபடத்தை வைத்து மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் அரிசி, காய்கறிகள், பிண்டம் உள்ளிட்டவற்றை வைத்து திதி கொடுத்து கடலில் விட்டார். இதில் ஏராளமான அதிமுகவினர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்