கன்னியாகுமரி மாவட்டத்திற்கு நாளை மறுநாள் உள்ளூர் விடுமுறை
கன்னியாகுமரி மாவட்டத்துக்கு பிப்.18-ம் தேதி உள்ளூர் விடுமுறையை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.;
கன்னியாகுமரி,
மகா சிவராத்திரி விழா சிவாலயங்களில் நாளை மறுநாள் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்துக்கு அன்றைய தினம் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் மார்ச் 25 ஆம் தேதி சனிக்கிழமையன்று வேலை நாளாக செயல்படும் என கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் அறிவித்துள்ளார்.