திருப்பூர் உழவர் சந்தையில், ஒரே நாளில் ரூ.1.49 லட்சத்து தக்காளி விற்ற விவசாயி.

திருப்பூர் உழவர் சந்தையில், ஒரே நாளில் ரூ.1.49 லட்சத்து தக்காளி விற்ற விவசாயி.

Update: 2023-07-31 11:37 GMT

சேவூர்

திருப்பூரில் உழவர் சந்தையில் ஒரே நாளில் சேவூர், முறியாண்டம்பாளையத்தை சேர்ந்த ஒரு விவசாயி 1.49 லட்சம் ரூபாய்க்கு தக்காளி விற்றார்.

தினமும் உயர்ந்து கொண்டிருக்கும் விலைவாசியால் ஏழை, நடுத்தர மக்கள் பிழைப்பு நடத்துவதே திண்டாட்டமாகி வருகிறது. ஒவ்வொரு நாளும் அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை முட்டுகிறது.

தக்காளி உற்பத்தி நடைபெற்று வரும் ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பரவலாக பெய்து வரும் கனமழை காரணமாக உற்பத்தி பாதிக்கப்பட்டதால் வரத்து குறைந்து தக்காளி விலை திடீரென அதிகரிக்க தொடங்கியுள்ளது.ஒரு கிலோ தக்காளி ரூ.120 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தக்காளி பழத்தை பறிக்கும் தொழிலாளிக்கு கூட கூலிகொடுக்க முடியாத அளவுக்கு தக்காளி விலை இருந்த நிலை மாறி, இன்று தங்கம் போல் கிராம் கணக்கில் தக்காளி விற்பனை செய்யும் அளவுக்கு விலை சென்று விட்டது. இந்நிலையில், திருப்பூர் புதிய பஸ் நிலையம் அருகே வடக்கு உழவர் சந்தையில் நேற்று முன்தினம் தக்காளி விலை 115 ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டது.இதைத் தொடர்ந்து சேவூர் அருகே முறியாண்டம்பாளையம் ஊராட்சி பெரியகுரும்பபாளையத்தை சேர்ந்த வலையன்காட்டு தோட்ட விவசாயி திருமூர்த்தி தனது தோட்டத்தில் விளைந்த தக்காளியை ஒரே நாளில் ரூ.1.49 லட்சத்திற்கு விற்றார்.

இது குறித்து விவசாயி திருமூர்த்தி கூறியதாவது,

விளைச்சல் குறைவு

தற்போது தக்காளி விளைச்சல் குறைந்துள்ளது.மழை இல்லாத காலங்களில் சொட்டுநீர் பாசன தண்ணீர் விட்டு அறுவடை செய்யக்கூடிய பயிர்களை தக்காளி, கத்தரி, வெண்டைக்காய், பூசணிக்காய் செடிகளை பயிரிட்டு உள்ளேன். இதை வாரத்தில் இரு நாட்களில், இப்பயிர்கள் பறிக்கப்பட்டு, திருப்பூர் வடக்கு உழவர் சந்தைக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வருகிறேன்.தற்போது தக்காளி விளைச்சல் குறைந்துள்ளது.இதனால் கடந்த ஒரு மாதமாக விலை மிகவும் உயர்ந்துள்ளது.இந்நிலையில் விலையை எதிர்பார்த்து கடந்த சித்திரை மாதம் ஒரு ஏக்கரில் 5,500 தக்காளி நாற்றுக்கள் நடவு செய்தேன்.தக்காளி பயிரிட்டு 45 நாட்களுக்கு பிறகு செடியில் பூ பிடித்து அதன்பிறகு 15 நாள் கழித்து செடியில் பிஞ்சு பிடித்த பிறகு இக்காய்களை பறிக்கலாம். இப்பயிர்கள் உற்பத்தி செய்ய குறிப்பாக தக்காளி நாற்று ஒன்று ரூ.1,க்கு (ஒருரூபாய்) அவினாசி பாளையத்திலிருந்து வாங்கி வந்து நாற்றுகள் நடுகிறோம். பிறகு உழவு செய்து, தொழு உரமிட்டு, தண்ணீர் பாய்ச்சி செடிகளை பராமரிக்க ஏக்கருக்கு சுமார் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரை செலவாகிறது. இதனால், மூன்று மாத காலம் மிகவும் கவனத்துடன் பாடுபட்டு விளைந்த தக்காளியை தினசரி திருப்பூர் வடக்கு உழவர் சந்தைக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வருகிறேன்.நேற்று முன்தினம் 1,300 கிலோ தக்காளி விற்பனைக்கு கொண்டு சென்றேன்.

ஒரு கிலோ தக்காளி 115 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டு, எனக்கு 1.49 லட்ச ரூபாய் கிடைத்தது.இது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.


Tags:    

மேலும் செய்திகள்