விழுப்புரத்தில் ஒரு கிலோ தக்காளி ரூ.180-க்கு விற்பனைஏறிக்கொண்டே இருக்கும் விலையால் மக்கள் அதிர்ச்சி

விழுப்புரத்தில் தக்காளியின் விலை தற்போது புதிய உச்சத்தை தொட்டுள்ளது. ஒரு கிலோ தக்காளி ரூ.180-க்கு விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து ஏறிக்கொண்டே இருக்கும் விலையால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள் ளனர்.

Update: 2023-07-31 18:45 GMT

நாட்டில் தக்காளி விலையானது கடந்த 1½ மாதத்துக்கும் மேலாக, மக்களால் தாங்கிக்கொள்ள முடியாத நிலைக்கு உயர்ந்துகொண்டே செல்கிறது. அண்டை மாநிலங்களில் பெய்து வரும் தொடர் மழை மற்றும் தமிழ்நாட்டில் போதிய விளைச்சல் இல்லாதது போன்ற காரணங்களினால் கடந்த ஜூன் மாதத்தில் இருந்தே மெல்ல உயர்ந்த விலை தற்போது மக்களால் தாங்கிக் கொள்ள முடியாத அளவிற்கு தாறுமாறாக எகிறி வருகிறது. விழுப்புரத்தை பொறுத்தவரை கடந்த 3 வாரங்களாக ஒரு கிலோ தக்காளியின் விலை ரூ.100 முதல் ரூ.120 வரை விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் கடந்த 4 நாட்களாக தக்காளியின் விலை மேலும் மெல்ல, மெல்ல உயரத்தொடங்கியது.

நேற்று முன்தினம் முதல் ரூ.60 உயர்ந்து ரூ.180-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதன் மூலம் விழுப்புரம் மாவட்டத்தில் தக்காளி விலையானது இதுவரை இல்லாத வகையில் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இவ்வாறு தாறுமாறாக தினசரி ஏறிக்கொண்டே இருக்கும் தக்காளி விலை மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி வருகிறது.

ரேஷன் கடைகளில் விற்பனை

மேலும், அரசு சார்பில் கூடுதலாக தக்காளியை கொள்முதல் செய்து ரேஷன் கடைகள் மூலமாக பொதுமக்களின் தேவைக்கேற்ப வழங்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

தக்காளி விலையேற்றம் பற்றி காய்கறி வியாபாரிகள் கூறுகையில், விழுப்புரம் நகருக்கு தினந்தோறும் ஆந்திர மாநிலத்தில் இருந்தும், கோயம்பேடு சந்தையில் இருந்தும் லாரிகள் மூலம் தக்காளி லோடு வருவது வழக்கம். தற்போது ஆந்திர மாநிலத்தில் தொடர் மழை பெய்து வருவதால் அங்கு விளைச்சலாகும் தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் வரத்து குறைந்து காணப்படுகிறது.

வரத்து குறைவு

நாள் ஒன்றுக்கு விழுப்புரம் மார்க்கெட்டுக்கு 70 முதல் 75 டன் வரை தக்காளி லோடு வரும். ஆனால் தற்போது வரத்து குறைந்து இன்று (நேற்று) 20 டன் தக்காளி லோடு மட்டுமே வந்துள்ளது. இவ்வாறு தக்காளி வரத்து குறைந்துள்ளதால் அதன் விலை உயர்ந்துள்ளது.

கடந்த வாரம் 25 கிலோ தக்காளி பெட்டி ரூ.1,700-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது ரூ.4 ஆயிரமாக உயர்ந்துள்ளது. அதுபோல் கிலோ ரூ.120-க்கு விற்பனை செய்த நிலையில் மேலும் விலை உயர்ந்து ரூ.180 வரை விற்பனை செய்யப்படுகிறது.

தக்காளியின் வரத்து குறைய, குறைய இன்னும் விலை உயர வாய்ப்புள்ளது. ஓரிரு நாட்களில் ஒரு கிலோ தக்காளியின் விலை ரூ.200-க்கு மேல் உயர வாய்ப்புள்ளது என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்