பெரியகுளம் கைலாசநாதர் மலை கோவிலில் இன்று பவுர்ணமி கிரிவலம்

பெரியகுளம் கைலாசநாதர் மலை கோவிலில் இன்று பவுர்ணமி கிரிவலம் நடக்கிறது;

Update: 2022-11-06 18:45 GMT

பெரியகுளம் அருகே கைலாசப்பட்டி பகுதியில் கைலாசநாதர் மலை கோவில் உள்ளது. இந்த கோவிலில் மாந்தோறும் பவுர்ணமியன்று கிரிவலம் நிகழ்ச்சி நடைபெறும். திருவண்ணாமலைக்கு அடுத்தாற்போல் இந்த மலைக்கோவிலில் கிரிவலம் செல்வது உகந்ததாக பக்தர்கள் கருதுகின்றனர். இந்நிலையில் இன்று (திங்கட்கிழமை) காலை அன்னாபிஷேகம் நிகழ்ச்சியும், மாலை பவுர்ணமி கிரிவலம் மற்றும் அன்னதானம் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. இதேேபால் பெரியகுளம் பாலசுப்ரமணிய சுவாமி கோவிலில் ராஜேந்திர சோழீஸ்வரருக்கு அன்னாபிஷேகம் இன்று காலை நடைபெறுகிறது. இந்த தகவலை கோவில் பராமரிப்பு குழுவினர் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்