சென்னை கோயம்பேடு சந்தையில் இன்று தக்காளி விலை கிலோவுக்கு ரூ.15 உயர்வு..!
சென்னை கோயம்பேடு சந்தையில் இன்று தக்காளி விலை கிலோவுக்கு ரூ.15 உயர்ந்துள்ளது.;
சென்னை,
தக்காளி விலை தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் ஜெட்வேகத்தில் உயர்ந்து 100-க்கும் மேல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கனமழை காரணமாக தக்காளி உற்பத்தியில் பாதிப்பு, காய்கறி வரத்து குறைவு ஆகிய இரண்டும் தக்காளி விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில், சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் நேற்று தக்காளி கிலோ 85 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று 15 ரூபாய் அதிகரித்து 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நவீன் தக்காளி விலை கிலோ ரூ.110-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை விலையில் தக்காளி கிலோ 120-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இஞ்சி- 220 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம்- 150 ரூபாய்க்கும், பட்டாணி- 200 ரூபாய்க்கும், பூண்டு- 200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இன்று 550 டன் தக்காளி மட்டுமே வந்ததால், விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.