புகையிலை பொருட்கள் விற்றவர் கைது
திருப்புவனம் அருகே புகையிலை பொருட்கள் விற்றவர் கைது செய்யப்பட்டார்.;
திருப்புவனம்,
திருப்புவனம் போலீஸ் சரகத்தை சேர்ந்த பசியாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 60). இவர் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவருடைய பெட்டிக்கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் திருப்புவனம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்கண்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு பெட்டிக்கடையில் சோதனை செய்தபோது 15 புகையிலை பாக்கெட்டுகள் விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. இதுகுறித்து ராஜேந்திரன் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.