புகையிலை பொருட்கள் விற்றவர் கைது

பொள்ளாச்சியில் புகையிலை பொருட்கள் விற்றவர் கைது செய்யப்பட்டார்.;

Update: 2023-01-14 18:45 GMT

பொள்ளாச்சி

பொள்ளாச்சி டி.கோட்டாம்பட்டி அண்ணா நகரில் உள்ள ஒரு மளிகை கடையில் மகாலிங்கபுரம் போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது தெரியவந்தது. இதையடுத்து கடையில் விற்பனைக்காக வைத்திருந்த 10 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக கடை உரிமையாளர் ஹரிகரனை (வயது 35) போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்