புகையிலைப் பொருட்கள் விற்ற அண்ணன், தம்பி கைது

கழுகுமலை கடையில் புகையிலைப் பொருட்கள் விற்ற அண்ணன், தம்பி கைது செய்யப்பட்டனர்.;

Update: 2023-06-27 18:45 GMT

கழுகுமலை:

கழுகுமலை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் மாரியப்பன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்மோகன் மற்றும் போலீசார் நேற்று மாலையில் ஏ.பி.சி.நகர் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் உள்ள பலசரக்கு கடையில் புகையிலை பொருட்களை பதுக்கி விற்பனை செய்த கடை உரிமையாளர்கள் ராதாகிருஷ்ணன்(வயது 52), அவரது தம்பி செந்தில்குமார் (48) ஆகியோரை போலீசார் ைகது ெசய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.5 ஆயிரம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்