புகையிலை ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி
தலைஞாயிறில் புகையிலை ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது.;
வாய்மேடு:
தலைஞாயிறில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் உலக புகையிலை ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு வட்டார மருத்துவ அலுவலர் தர்மராஜ் தலைமை தாங்கினார். இதில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் இளையராஜா, சுகாதார ஆய்வாளர் பட்டாபிராமன், சுகாதார செவிலியர்கள், மருத்துவமனை பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டு உலக புகையிலை தின ஒழிப்பு தின உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.