புகையிலை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோக்கலூரில் புகையிலை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2022-05-31 13:11 GMT

பேரணாம்பட்டு

பேரணாம்பட்டு வட்டார டி.டி. மோட்டூர் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் தேசிய புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோக்கலூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு பேரணாம்பட்டு தாசில்தார் வெங்கடேசன் தலைமை தாங்கினார். ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் சிவக்குமார் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு புகையிலை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என பேசினார்.

இதனைத் தொடர்ந்து உறுதி மொழி எடுத்துக் கொள்ளப்பட்டது. நிகழ்ச்சியில் மண்டல துணை தாசில்தார் வடிவேல், குண்டல பல்லிஊராட்சி தலைவர் லட்சுமி, ஒன்றிய கவுன்சிலர் பாஸ்கரன் மற்றும் ஆரம்ப சுகாதாரநிலைய மேற்பார்வையாளர், ஆய்வாளர்கள், கிராம சுகாதார செவிலியர்கள், பொதுக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்