மாவட்ட குறைதீர் அலுவலரிடம்பிரதமர் குடியிருப்பு திட்டம் தொடர்பான புகார் தெரிவிக்கலாம்:கலெக்டர் தகவல்

மாவட்ட குறைதீர் அலுவலரிடம் பிரதமர் குடியிருப்பு திட்டம் தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம் என்று தேனி கலெக்டர் தெரிவித்தார்.

Update: 2023-07-25 18:45 GMT

தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தேனி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை மூலம் பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் தொடர்பாக குறைகள் மற்றும் புகார்களை விசாரித்து தீர்வு காண்பதற்கு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் மாவட்ட குறைதீர் அலுவலராக வக்கீல் சந்திரசேகரன் நியமிக்கப்பட்டுள்ளார். இத்திட்டத்தில் சரியான பயனாளிகளை அடையாளம் காண்பது, வீடு கட்டுவதில் ஏற்படும் குறைபாடுகள் மற்றும் புகார்களை இந்த அலுவலரிடம் தெரிவிக்கலாம்.

இத்திட்டம் தொடர்பாக பெறப்படும் புகார்களுக்கு சம்பந்தப்பட்ட கிராமத்திற்கே நேரடியாகச் சென்று பயனாளிகளிடம் விசாரணை நடத்தி உரிய தீர்வு காணும் பணியில் மாவட்ட குறைதீர் அலுவலர் ஈடுபடுவார். எனவே, பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் தொடர்பான புகார்களை, 'மாவட்ட குறைதீர்ப்பாளர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகம், தேனி' என்ற முகவரிக்கு தபால் மூலமாகவோ, நேரிலோ கொடுக்கலாம். மேலும், ombudsperson.thenl@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்