சென்னை பயணிகளின் கவனத்திற்கு... மாநகர பேருந்துகள் நிற்கவில்லையா? - புகார் எண் அறிவிப்பு
பேருந்து நிறுத்தங்களில் மாநகரப் பேருந்துகள் நிற்காமல் சென்றால் புகார் அளிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.;
சென்னை,
சென்னையில் மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் நாள்தோறும் 2,500-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணித்து வருகின்றனர்.
இந்த நிலையில், சென்னையில் மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் இயக்கப்படும் பேருந்துகள் அட்டவணையிடப்பட்ட பேருந்து நிறுத்தங்களில் நிறுத்தாமல் சென்றால் 149 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் புகார் அளிக்கலாம் என்று போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.
பேருந்து வழித்தட எண், பக்கவாட்டு எண் அல்லது பதிவு எண், நேரம் மற்றும் பேருந்து நிற்காமல் சென்ற நிறுத்தம் ஆகியவற்றை குறிப்பிட்டு புகார் அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.