விவசாயியிடம் வாங்கிய கடனை திருப்பி கொடுக்க ரூ.5 லட்சம் காசோலை வழங்கி மோசடி செய்தவருக்கு ஜெயில்; ஈரோடு கோர்ட்டு தீர்ப்பு

விவசாயியிடம் வாங்கிய கடனை திருப்பி கொடுக்க ரூ.5 லட்சம் காசோலை வழங்கி மோசடி செய்தவருக்கு ஜெயில் தண்டனை விதித்து ஈரோடு கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

Update: 2022-11-20 00:27 GMT

ஈரோடு அருகே உள்ள சின்னியம்பாளையத்தை சேர்ந்தவர் வசந்தம் (வயது 40). விவசாயி. இவரிடம் ஈரோடு பெருந்துறைரோடு தங்கம் நகரை சேர்ந்த பரணிதரன் (36) என்பவர் கடந்த 2017-ம் ஆண்டு ரூ.5 லட்சம் கடன் வாங்கி இருந்தார். இந்த கடனை அவர் திருப்பி கொடுப்பதற்காக ரூ.5 லட்சம் காசோலையை வசந்தமிடம் வழங்கினார். அவர் அந்த காசோலையை வங்கியில் செலுத்தியபோது காசோலை வழங்கப்பட்ட வங்கி கணக்கில் பணம் இல்லை என்று திரும்ப வந்தது. இதையடுத்து காசோலை கொடுத்து மோசடி செய்ததாக பரணிதரன் மீது ஈரோடு 2-வது குற்றவியல் விரைவு கோர்ட்டில் கடந்த 2018-ம் ஆண்டு வசந்தம் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கினார். அதில் அவர், குற்றம்சாட்டப்பட்ட பரணிதரனுக்கு 3 மாதம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்