தண்ணீரை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்

தென்பெண்ணை ஆற்றில் இருந்து கே.ஈச்சம்பாடி அணைக்கு வரும் தண்ணீரை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று பொதுப்பணித்துறை அலுவலர்களுக்கு கலெக்டர் சாந்தி உத்தரவிட்டுள்ளார்.

Update: 2022-09-10 17:49 GMT

தென்பெண்ணை ஆற்றில் இருந்து கே.ஈச்சம்பாடி அணைக்கு வரும் தண்ணீரை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று பொதுப்பணித்துறை அலுவலர்களுக்கு கலெக்டர் சாந்தி உத்தரவிட்டுள்ளார்.

வளர்ச்சி திட்டப்பணிகள்

கம்பைநல்லூர் பேரூராட்சியில் ரூ.2 கோடியே 2 லட்சத்து 28 ஆயிரம் மதிப்பீட்டில் 17 வளர்ச்சி திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. இதேபோன்று அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 15 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் 55 வீடுகள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. பேரூராட்சியில் மொத்தம் ரூ.3 கோடியே 17 லட்சத்து 78 ஆயிரம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் சாந்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த திட்ட பணிகளை குறித்த காலத்துக்குள் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று பேரூராட்சி அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். பின்னர் அந்த பகுதியில் உள்ள ஏரிகளை பார்வையிட்ட அவர் ஏரிகளில் கழிவுநீர் கலக்காமல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், ஆக்கிரமிப்புகளை அகற்றி ஏரிக்கரைகளை செம்மைபடுத்த வேண்டும் என்று அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

கே.ஈச்சம்பாடி அணை

தொடர்ந்து கே.ஈச்சம்பாடி அணையை கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அணையின் நீர் இருப்பு, நீர்வரத்து, நீர் வெளியேற்றம் உள்ளிட்டவற்றை பொதுப்பணித்துறை அலுவலர்களிடம் அவர் கேட்டறிந்தார். அப்போது கலெக்டர் கூறுகையில், கே.ஈச்சம்பாடி அணையில் நீர் இருப்பு 17.35 அடி உள்ளது. அணைக்கு வினாடிக்கு 9,400 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. இந்த தண்ணீர் முழுவதும் தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றப்படுகிறது. இந்த நிலையில் அணையையும், நீர்வரத்ைதயும் பொதுப்பணித்துறை அலுவலர்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று கலெக்டர் உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின்போது பேரூராட்சிகள் துறை உதவி இயக்குனர் குருராஜன், கம்பைநல்லூர் பேரூராட்சி தலைவர் வடமலை முருகன், துணைத்தலைவர் மதியழகன், பேரூராட்சி செயல் அலுவலர் ஜெகதீசன், நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் ஆறுமுகம் மற்றும் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்