கோவில்பட்டி நகருக்கு சீரான குடிநீர் வினியோகம்
பழுதான மோட்டார் மராமத்து செய்யப்பட்டு, கோவில்பட்டி நகருக்கு சீரான குடிநீர் வினியோகம் செய்யப்படுவதாக நகராட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.;
கோவில்பட்டி:
கோவில்பட்டி நகருக்கு சீவலப்பேரி நீரேற்று நிலையத்தில் இருந்து தினமும் 80 லட்சம் லிட்டர் குடிநீர் குழாய் முலம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இங்குள்ள ஒரு மின் மோட்டார் பழுதடைந்ததால் நகரில் கடந்த சில நாட்களாக குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டது. இதை தொடர்ந்து சீவலப்பேரி நீரேற்று நிலையத்தில் புதிதாக மின் மோட்டார் மாற்றும் பணி நடந்தது. இந்த பணியை நகரசபை தலைவர் கா. கருணாநிதி பார்வையிட்டு துரிதப்படுத்தினார்.
இதை தொடர்ந்து நேற்று முன்தினம் மாலையில் புதிய மின்மோட்டார் மூலம் குடிநீர் வினியோகம் செய்யும் பணி தொடங்கியது. இதன் மூலம் கோவில்பட்டி நகருக்கு 20 லட்சம் லிட்டர் குடிநீர் விநியோகம் அதிகரித்துள்ளதாகவும், சுழற்சி முறையில் நகரிலுள்ள வீடுகளுக்கு சீராக குடிநீர் வினியோகிக்கப்படும் என்றும் நகரசபை தலைவர்தெரிவித்தார்.