கண்மாய் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரிமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில், வருசநாடு கிராமத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2023-07-30 18:45 GMT

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில், வருசநாடு கிராமத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு விவசாயிகள் சங்க தேனி மாவட்ட செயலாளர் கண்ணன் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கடமலை-மயிலை ஒன்றிய செயலாளர் போஸ், கிளைச்செயலாளர் பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தின்போது, வருசநாடு கிராமத்தில் உள்ள பஞ்சந்தாங்கி கண்மாயில் ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றி, தூர்வார வேண்டும். பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள சிங்கராஜபுரம்-அரண்மனைபுதூர், வருசநாடு-வாலிப்பாறை ஆகிய சாலைகளை சீரமைக்க வேண்டும். தேங்காய், கொட்டை முந்திரி, இலவம் பஞ்சு ஆகியவற்றின் விலை வீழ்ச்சியை தடுக்கும் வகையில், அரசே விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். 

Tags:    

மேலும் செய்திகள்