துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்

தமிழகத்தில் காலியாக உள்ள துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று தர்மபுரியில் நடந்த ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2022-09-24 18:45 GMT

தமிழகத்தில் காலியாக உள்ள துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று தர்மபுரியில் நடந்த ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நிர்வாகிகள் கூட்டம்

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தின் நிர்வாகிகள் கூட்டம் தர்மபுரியில் உள்ள சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவர் சதீஸ்குமார் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் ஆறுமுகம், மாவட்ட செயலாளர் சங்கர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஒருங்கிணைப்பு குழு தலைவர் விமலன், நிர்வாகி குணசேகரன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சுருளிநாதன் ஆகியோர் கோரிக்கைகள் குறித்து பேசினர்.

ஊரக வளர்ச்சித்துறையில் பணிபுரியும் பணி மேற்பார்வையாளர்களுக்கு விருப்ப பணிமாறுதல் வழங்கவேண்டும். பதிவறை எழுத்தர்கள், ஊராட்சி செயலாளர்களுக்கு 2 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள இளநிலை உதவியாளர் பதவி உயர்வை வழங்க வேண்டும். காலியாக உள்ள துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

பிரசார இயக்கம்

சங்கத்தின் முன்னாள் மாநில தலைவரின் பணி நிறைவு ஆணையை அனுமதித்து பணபலன்களை உடனே வழங்கோரி வருகிற 29-ந்தேதி தர்மபுரி மாவட்டத்தில் அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் முன்பும் பிரசார இயக்கம் நடத்துவது, வருகிற 30-ந்தேதி கோரிக்கைகளை வலியுறுத்தி ரத்த கையெழுத்து இயக்கம் நடத்தி துறை இயக்குனர், துறை செயலாளர், துறை அமைச்சர் ஆகியோருக்கு தபால் மூலம் அனுப்புவது என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதில் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்