டி.என்.பி.எஸ்.சி. பயிற்சி மையம் அமைப்பதற்கான ஆலோசனை கூட்டம்

டி.என்.பி.எஸ்.சி. பயிற்சி மையம் அமைப்பதற்கான ஆலோசனை கூட்டம்

Update: 2022-12-28 16:01 GMT

போடிப்பட்டி,

உடுமலையில் டி.என்.பி.எஸ்.சி.மையம் அமைப்பதற்கான ஆலோசனை கூட்டத்தில் சண்முக சுந்தரம் எம்.பி. கலந்து கொண்டார்.

தொழில் வாய்ப்புகள்

உடுமலையில் டி.என்.பி.எஸ்.சி. பயிற்சி மையம் அமைப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் உடுமலை நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு நகராட்சித்தலைவர் மு.மத்தீன் தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையர் சத்தியநாதன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கலந்து கொண்ட பொள்ளாச்சி சண்முகசுந்தரம் எம்.பி., பேசியதாவது:-

நமது பகுதியில் நீர்வளம் சிறப்பாக உள்ளதால் விவசாயத்தில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். அத்துடன் தொழிற்சாலைகள் அதிகமாக இருப்பதால் தொழில் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இதனால் அரசுப்பணிகளில் உள்ளவர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. நமது பகுதியைச் சேர்ந்தவர்கள் அரசுப் பணிகளில் சேர வேண்டும் என்பதற்காகவே இந்த பயிற்சி மையம் உருவாக்கப்படுகிறது. இதில் குறைந்தது 100 மாணவர்களை சேர்க்க நகர்மன்ற உறுப்பினர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். உடுமலை நகராட்சிப் பகுதி மட்டுமல்லாமல் சுற்றியுள்ள பேரூராட்சிகள், ஊராட்சிகளைச் சேர்ந்த மாணவர்களும் இங்கு சேர்ந்து பயிற்சி பெறலாம். அவர்களுக்குத் தேவையான பயிற்சியுடன் புத்தகங்கள் உள்ளிட்டவையும் வழங்கப்பட உள்ளது.மேலும் வாரம் தோறும் மாதிரித் தேர்வுகளும் நடத்தப்படும்.

சுய உதவிக்குழுக்கள்

கடந்த 10 ஆண்டுகளாக சரியான வழிகாட்டுதல்கள் இல்லாமல் முடங்கிக் கிடக்கும் சுய உதவிக் குழுக்களுக்கு புத்துயிரூட்டும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பல பெண்கள் மைக்ரோ பைனான்ஸ் எனப்படும் தனியார் நிதி நிறுவனங்களிடம் கடன் வாங்கி அதிக வட்டி செலுத்தி வருகிறார்கள். .18 முதல் 60 வயது கொண்ட 12 பெண்கள் இணைந்தால் ஒரு மகளிர் சுய உதவிக்குழுவை உருவாக்கலாம்.அவர்கள் 2 வது மாதத்தில் சுழல் நிதியாக ரூ 10 ஆயிரம் பெற முடியும்.6 மாதங்கள் வெற்றிகரமாக செயல்படும் குழுக்களுக்கு ரூ. 2 லட்சம், 1 வருடம் ஆனால் ரூ. 10 லட்சம், 4 ஆண்டுகள் கடந்தால் ரூ. 25 லட்சம் என நிதி பெறும் வாய்ப்பு உள்ளது.

சங்கராமநல்லூர் பேரூராட்சியில் 1 வாரத்தில் 60 குழுக்களும், குமரலிங்கம் பேரூராட்சியில் 101 குழுக்களும் உருவாக்கப்பட்டுள்ளது. சிறுகுறு வியாபாரிகளுக்கு கடன் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறதுஇந்த திட்டத்தில் அடமானம் இல்லாமல் ரூ. 10 ஆயிரம் முதல் ரூ 10 லட்சம் வரை கடன் பெற முடியும்.இதுதவிர தாட்கோ மூலம் ரூ. 2 கோடி வரை கடன் பெறும் வாய்ப்பு உள்ளது.இதற்கென சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது.

இவ்வாறு அவர் ேபசினார்.

---

2 காலம்

உடுமலை நகராட்சியில் நடந்த கூட்டத்தில் சண்முகசுந்தரம் எம்.பி., பேசிய போது எடுத்த படம்.

Tags:    

மேலும் செய்திகள்