'சென்னையை பூங்காக்களின் நகரமாக தமிழக அரசு மாற்றும்' - தலைமை செயலாளர் முருகானந்தம்

சென்னையை பூங்காக்களின் நகரமாக தமிழக அரசு மாற்றும் என தலைமை செயலாளர் முருகானந்தம் தெரிவித்துள்ளார்.

Update: 2024-10-12 10:12 GMT

சென்னை,

சென்னை எழும்பூரில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில், ஐ.ஏ.எஸ். அதிகாரி செல்வம் எழுதியுள்ள 'ஹார்வர்டு நாட்கள்' என்ற புத்தகத்தை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி மகாதேவன் வெளியிட்டார். தமிழக அரசின் தலைமை செயலாளர் முருகானந்தம் அதனை பெற்றுக்கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய தலைமை செயலாளர் முருகானந்தம், பொருளாதார வளர்ச்சிக்கு தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை பட்டியலிட்டார். அப்போது பேசிய அவர், "சென்னையில் 12 புதிய பூங்காக்கள் உருவாக்கப்படுகின்றன. மாநிலம் முழுவதும் கடந்த 3 ஆண்டுகளில் நகராட்சி பகுதிகளில் 1,250 பூங்காக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஒரு கான்கீரிட் வனமாக இருக்கும் சென்னையை பூங்காக்களின் நகரமாக தமிழக அரசு மாற்றும்" என்று தெரிவித்தார். 

Full View



Tags:    

மேலும் செய்திகள்