தமிழகத்தில் மேலும் 512- பேருக்கு கொரோனா

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 512 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.;

Update: 2022-08-29 16:25 GMT

சென்னை,

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 512- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 35 லட்சத்து 67 ஆயிரத்து 672 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவில் இருந்து இன்று குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 575 ஆக உள்ளது. கொரோனா பாதிப்பால் இன்று ஒருவர் உயிரிழந்துள்ளார். கொரோனா பாதிப்பைக் கண்டறிய 20 ஆயிரத்து 306- பேருக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. சென்னையில் மேலும் 77 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்