த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் நிர்வாகிகளுடன் ஆலோசனை
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் மறைந்த தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் கர்மவீரர் காமராஜரின் 121-வது பிறந்த நாளையொட்டி ஈரோட்டில் வருகிற 15-ந் தேதி மாநாடு நடைபெற உள்ளது.;
காமராஜர் பிறந்தநாள் மாநாடு
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் மறைந்த தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் கர்மவீரர் காமராஜரின் 121-வது பிறந்த நாளையொட்டி ஈரோட்டில் வருகிற 15-ந் தேதி மாநாடு நடைபெற உள்ளது.
இந்த மாநாட்டை சிறப்பான முறையில் வெற்றி மாநாடாக நடத்திட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில் ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
ஜி.கே.வாசன் ஆலோசனை
அதன்படி அவர் வேலூர் மாநகர மாவட்ட தலைவர் ஆர்.ஜே.மூர்த்தி, புறநகர் மாவட்ட தலைவர் அருணோதயம், திருப்பத்தூர் மாவட்ட தலைவர் குப்புசாமி, புறநகர் மாவட்ட இளைஞரணி தலைவர் தினகரன் மற்றும் நிர்வாகிகளிடம் ஆலோசனை மேற்கொண்டார்.
அப்போது இந்த மாநாட்டினை நடத்துவது தொடர்பாக அவர் பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.